உதவி செய்வது போல் மோசடி!! போண்டா மணியிடம் பணத்தை சுருட்டிய நபர் கைது!!

தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் நகைச்சுவையில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர் நடிகர் போண்டா மணி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

குறிப்பாக தன்னுடைய 2 சிறுநீரகங்களும் செயலிழந்து, மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் திண்டாடி வருகிறார். இதன் காரணமாக சமீபத்தில் காமெடி நடிகர் ஒருவர் சிறுநீரக அறுவவை சிகிச்சை செய்ய கிட்டத்தட்ட பத்து லட்சம் மேல் தேவைப்படும் என தெரிவித்தார்.

விஜய் படத்தை விட சிவகார்த்திகேயன் படத்துக்கு அவ்வளவு மவுசா! ப்ரின்ஸ் திரைப்படம் ஷாக்கிங் அப்டேட்!

இதனையடுத்து தனுஷ், ஜிவா, சூர்யா போன்ற ரசிகர்கள் போண்டாமணி மருத்துவ செலவுக்கு நிதி வழங்கினர். அந்த வகையில் நடிகர் போண்டா மணியிடம் உதவி செய்வது போல் ரூ.1 லட்சம் சுருட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதன் படி, நடிகர் போண்டா மணியின் மனைவி தேவி, ராஜேஷ் பிரித்தீவ் என்பவரிடம் மருந்து வாங்க கொடுத்த ஏடிஎம் கார்டை வைத்து, நகைக்கடையில் நகை வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

விஜய் படத்தை விட சிவகார்த்திகேயன் படத்துக்கு அவ்வளவு மவுசா! ப்ரின்ஸ் திரைப்படம் ஷாக்கிங் அப்டேட்!

தற்போது கைது செய்யப்பட்ட ராஜேஷ் பிரித்தீவ்-யிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகர் போண்டா மணிக்கு உதவி செய்வது போல் நடித்து பணத்தை சுருட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.