தடுப்பூசி போடலைன்னா கைது.. பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் திடீர் முடிவு!

கொரோனா வைரஸ் தொற்று நம்மை 2019 ஆம் ஆண்டு துவங்கி ஆட்கொண்டு வருகின்றது.

கொரோனாவைக் கட்டுக்குள் வைக்க தற்போது இருக்கும் ஒரே ஆப்ஷன் தடுப்பூசிதான் என்று மருத்துவத் துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

கொரோனாத் தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டாலும் பாதிப்பு பெரிதளவில்லை இருப்பதில்லை என ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஸ்புட்னிக், கோவிஷில்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் இரண்டு கட்டங்களாக செலுத்தப்பட்டு வருகின்றன.

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனாவை பூஜ்ஜியமாக்க எண்ணி, தடுப்பூசிகளைச் செலுத்தும் பணியில் மும்முரமாகக் களமிறங்கியுள்ளது.

கொரோனாத் தடுப்பூசி போடாதவர்கள் வீட்டைவிட்டு பொது இடங்களுக்கு வரக் கூடாது என்று உத்தரவிட்டு உள்ளது.

அரசின் ஆணையை மீறி வீட்டைவிட்டு வெளியே வருவோரை கைது செய்யக் கோரி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பினை பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் டொடி ரிஹோ டுடர்டி இன்று வெளியிட்டுள்ளார்.

இதனை அடுத்து பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனாத் தடுப்பூசி செலுத்தியவர்கள், செலுத்தாதவர்கள் குறித்த பட்டியலை தயாரிக்க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த கட்டாய அறிவிப்பால் பொது மக்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.