புத்தாண்டு! போதையில் வாகனம் ஓட்டினால் கைது- காவல்துறை எச்சரிக்கை!!

ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு டிசம்பர் 31-ஆம் தேதி நள்ளிரவில் 1 மணி முதல் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு தமிழக காவல்துறை மூலம் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனவரி 1-ம் தேதி பொதுமக்கள் புத்தாண்டை பொதுமக்கள் அமைதியாக கொண்டாட வேண்டும் என அறிவுறுத்திய காவல்துறையினர் டிசம்பர் 31-ஆம் தேதி நள்ளிரவில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலாக விடுதிகள் மற்றும் வீடுகளில் கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 90 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சிறப்பு வாகன சோதனை தமிழகம் முழுவதும் நள்ளிரவில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் கடற்கரையில் இறங்குதல், மறு அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கைது செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாகன ஓட்டிகள் அதி வேகமாகவும், கவன குறைவாகம் வாகனங்களை ஓட்டக்கூடாது எனவும், இவற்றை மீறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.