Connect with us

ஈஸ்வரப்பாவை கைது செய்க: காங்கிரசார் சட்டப்பேரவை வளாகத்தில் விடிய, விடிய போராட்டம் !!

Strike AdobeStock 51804722 scaled

News

ஈஸ்வரப்பாவை கைது செய்க: காங்கிரசார் சட்டப்பேரவை வளாகத்தில் விடிய, விடிய போராட்டம் !!

ஈஸ்வரப்பாவை கைது செய்க: காங்கிரசார் சட்டப்பேரவை வளாகத்தில் விடிய, விடிய போராட்டம் !!

ஒப்பந்ததாரர் தற்கொலைக்கு காரணம் என புகார் கூறப்பட்ட கர்நாடக பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா செய்த நிலையில் அவரை கைது செய்ய சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கர்நாடகா ஊரக வளர்ச்சி துறை அமைச்சரான ஈஸ்வரப்பா லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக கூறி, பகிரங்க ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டேல்  மூன்று தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் இவரது மரணத்திற்கு காரணம் ஈஸ்வரப்பா தான் என கூறி இவரை  கைது செய்ய  வேண்டும் என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதனிடையே தன்மீதான குற்றச்சாட்டை மறுக்கும் ஈஸ்வரப்பாவை கைதுசெய்ய கோரி முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை வீட்டை முற்றுகையிட்டு காங்கிரஸ் தலைவர் சித்தராமையா தலைமையில் போராட்டத்தில் குதித்தனர்.

இந்த சூழலில் ஈஸ்வர்ப்பா மீது கொலை மற்றும் ஊழல் வழக்குகளில் கைது செய்யும் வரை தங்களின் போராட்டம் ஓயாது என காங்கிரஸ் கட்சியினர் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top