எக்ஸாம் எழுதாம சர்டிபிகேட் தராதீங்க! காசுக்கட்டிய அரியர் மாணவர்களின் நிலைமை?

சில மாதங்களுக்கு முன்பு அனைவருக்கும் ஆல்-பாஸ் ன்ற முறை காணப்பட்டது. ஏனென்றால் தமிழகத்தில் கடும் நோய் காலமாக இருந்ததால் மாணவர்கள் தேர்வு எழுதாமல் பாஸ் செய்யப்பட்டனர்.உயர்நீதிமன்றம்

இந்த நிலையில் அதில் அரியர் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அதனை ரத்து செய்தது உயர்நீதிமன்றம். அதன்படி அரியர் தேர்வு எழுதாமல் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை அடுத்து தமிழ்நாட்டில் அரியர் தேர்வுகள் ரத்து செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அரசாணைப்படி அரியர் கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அரசாணையை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்ளிட்டோர் வழக்கு தொடுத்துள்ளனர்.அரியர் தேர்வர்களின் தேர்ச்சிக்கு எதிரான வழக்குகள் இன்றைய தினம் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி முன் விசாரணைக்கு வந்தது.

அரியர் தேர்ச்சி அரசாணையை அமல்படுத்தவில்லை என்று தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளார். தேர்வு எழுதாமல் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனால் தேர்வு எழுதாமல் சான்றிதழ் வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர் நீதிபதிகள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment