Connect with us

20 இடங்களில் வேட்புமனு பெற ஏற்பாடு; 24 தேர்தல் பறக்கும் படைகள்! கோவையில் தொடங்கியது தேர்தல் பணி…..

coimbatore 2

செய்திகள்

20 இடங்களில் வேட்புமனு பெற ஏற்பாடு; 24 தேர்தல் பறக்கும் படைகள்! கோவையில் தொடங்கியது தேர்தல் பணி…..

20 இடங்களில் வேட்புமனு பெற ஏற்பாடு; 24 தேர்தல் பறக்கும் படைகள்! கோவையில் தொடங்கியது தேர்தல் பணி…..

வருகின்ற 19ஆம் தேதி நம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலமாக மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் நேற்றையதினம் தகவல் கிடைத்தது.

இந்த நிலையில் கோவை மாநகரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி 24 தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விதிகளை மீறல்களை கண்காணிக்க 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தலின்போது வாக்குக்கு பணம், பரிசுப் பொருட்களை வழங்குவதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் கோவையில் 20 இடங்களில் வேட்புமனு பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி கோவை மாநகராட்சியில் சுமார் 20 இடங்களில் வேட்பு மனுக்களை பெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சியில் 5 வார்டுக்கு ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். நாளை முதல் வேட்பு மனு பெறப்படும் நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top