“தரதரன்னு இழுத்து என்னை வண்டிக்குள்ள தள்ளுங்க..“ தளபதி விஜய் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் சொன்ன கத்தி பட சீக்ரெட்

கமர்ஷியல் படங்களில் சமுதாய கருத்தை முன்வைத்து எடுக்கும் இயக்குநர்களில் குறிப்பிடத்தகுந்தவர் ஏ.ஆர். முருகதாஸ், அஜீத்தை வைத்து இவர் இயக்கிய தீனா படம் மூலமாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் ஏ.ஆர். முருகதாஸ். கமர்ஷியல்  ரீதியாக தீனா வெற்றியைக் கொடுத்த நிலையில் அஜீத்துக்கும் தல என்ற பெயரை அடைமொழியாக வைக்கக் காரணமாக அமைந்தது.

பின்னர் கேப்டன் விஜயகாந்தை வைத்து இயக்கிய ரமணா திரைப்படம் பெரும் வெற்றி பெற்று ஏ.ஆர். முருகதாசை டாப் இயக்குநர்கள் வரிசையில் சேர்த்தது. அதன்பின் கஜினி, ஏழாம் அறிவு என சூர்யாவை வைத்து மாஸ் ஹிட் கொடுக்க தொடர்ந்து தளபதி விஜய்யுடன் கூட்டணி சேர்ந்தார்.

பிரேமம் இயக்குநருக்கு இப்படி ஒரு குறைபாடா? : அதிர்ச்சியான மல்லுவுட்

தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்த விஜய்க்கு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படம் மீண்டும் திரையுலகில் தளபதி விஜய்யை மாஸ் ஹீரோ அந்தஸ்திற்கு உயர்த்தியது. இந்தப் படத்திற்கு பிறகு தான் தமிழ் சினிமாவில் விஜய் தொடர்ந்து சமுதாய நோக்குள்ள கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து அதில் வரிசையாக ஹிட்டும் கொடுத்தார்.

அதன்பின் இவர்கள் காம்போவில் உருவான கத்தி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஜீவா, கதிர் என இரண்டு வேடங்களில் நடித்த தளபதி விஜய் விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினையை கையில் எடுத்து கார்ப்பரேட் கம்பெனிகளின் அராஜகத்தை ஒழிக்கும் கேரக்டரில் வெளுத்து வாங்கியிருப்பார்.

மீண்டும் இயக்குனர் நெல்சன் உடன் இணையும் தளபதி விஜய்.. ரகசிய அப்டேட் இதோ!

இந்த திரைப்பட படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்ய நிகழ்வை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தற்போது கூறியுள்ளது தற்போது வைரல் ஆகி வருகிறது. கத்தி படத்தில் தளபதி விஜய்யை பேராட்டத்தில் கைது செய்வது போல் ஒரு சீன் வரும். இந்த காட்சியில் தன்னை தர தரவென இழுத்து வேனில் தள்ளுமாறும் அப்பொழுதுதான் கேரக்டர் நன்றாக வரும் என்று கூறிய நிலையில் இயக்குநர் முருகதாஸ் அதை விஜய்யின் FANS-ஐ மனதில் கொண்டு மறுத்துள்ளார். எனினும் விஜய் விடாப்பிடியாகக் கூறியதால் அந்தக் காட்சியை படமாக்கியதாக முருகதாஸ் கூறியுள்ளார்.

Ar Murugadoss

மேலும் காவல் நிலையத்தில் வெறும் டிரவுசருடன் விஜய் அமரும் காட்சியும் இடம்பெற்றிருக்கும். இதற்கும் இயக்குநர் மறுப்பு தெரிவித்த நிலையில் விஜய் தானே அதற்குரிய காஸ்ட்டியூமை தேர்ந்தெடுத்து நடிப்பில் மிரட்டியிருப்பார்.  இவ்வாறு ஏ.ஆர். முருகதாஸ் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஏ.ஆர். முருகதாஸ்-சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...