ஆயுத பூஜை!! தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

ஆயுதபூஜை விடுமுறையை ஒட்டி சிறப்பு பேருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பயணிகளில் வசதிகளுக்கு ஏற்ப செப்.30-ம் தேதி மற்றும் அக்.1-ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார். அதன்படி தாம்ரம், கோயம்பேடு, பூந்தமல்லி ஆகிய பேருந்து நிலையங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் போளூர், செஞ்சி, வந்தவாசி உள்ளிட்ட ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

இதனிடையே பெரும்பாலான பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இயக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதே போல் சென்னையில் இருந்து வழக்கமாக 2050 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் , 2050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சேவையானது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு போக்குவரத்து துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.