அர்ஜுன் பொண்ணு கல்யாணம்!.. அழைப்பிதழ் வைக்க ஆரம்பிச்சிட்டாரு!.. எப்போ கல்யாணம் தெரியுமா?

அக்ஷன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதிக்கும் சென்ற ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்த நிலையில் தற்போது நிச்சயம் நடந்த அதே அர்ஜூனின் ஹனுமான் கோவிலில் திருமணமும் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

arj

அர்ஜுன் மகள் திருமணம்:

நடிகர் அர்ஜூன் ஒரு தென்னிந்திய நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். அர்ஜூன் நன்றி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் பெரும்பாலும் சண்டை காட்சிகள் உள்ள படமாக தேர்தெடுத்து நடித்து வந்ததால் அக்ஷன் கிங் என்ற பெயரையும் பெற்றார். ஜெய் ஹிந்த், முதல்வன், ரிதம், கர்ணா, குருதிப்புனல் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தீவிர அனுமான் பக்தனான அர்ஜுன் சென்னையில் 35அடி ஆஞ்சநேய சிலையுடன் கோவில் ஒன்றை கட்டி உள்ளார். மேலும் அர்ஜுன் கன்னட நடிகரான ராஜேஷ் என்பவரின் மகள் நிவேதிதாவை திருமணம் செய்துக்கொண்டார். அர்ஜூனுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகளான ஐஸ்வர்யா அர்ஜுன் தமிழில் பட்டத்து யானை படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் நடிகர் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதியை காதலித்து வந்துள்ளார். தன் மகளின் காதலுக்கு பச்சை கொடி காட்டிய அர்ஜுன் தான் கட்டிய அஞ்சநேயர் கோவிலில் நிச்சையதார்ததை நடத்தி வைத்தார்.
நடிகர் மற்றும் இயக்குநரன தம்பி ராமைய்யா மைனா, ஒஸ்தி, கும்கி, கழுகு, ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். மேலும் வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தை இயக்கியுள்ளார்.

இவரது மகன் உமாபதி அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும், மணியார் குடும்பம், திருமணம், தண்ணி வண்டி என பல படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.உமாபதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைப்பெற்ற அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

மு.க. ஸ்டாலினுக்கு திருமண அழைப்பிதழ்:

இந்நிலையில் ஜுன் 10ம் தேதி கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனின் தோட்டத்தில் ஐஸ்வர்யா மற்றும் உமாபதிக்கு திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திருமண அழைப்பிதழை தொடங்கிய அர்ஜுன் அவரது மனைவி நிவேதிதா, தம்பி ராமைய்யா அவரது மனைவி என குடும்பத்துடன் நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருமண அழைப்பு விடுத்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மேலும் பல அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரையும் அழைக்க விருப்பதாக தெரிவித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...