என்னது! அர்ஜூன் தாஸுடன் காதலா? ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்!!

தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானர் ஐஸ்வர்யா லட்சுமி. பின்னர் கட்டா குஸ்தி என்ற படத்தில் ஆக்‌ஷன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தார்.

இந்நிலையில் நேற்றை தினத்தில் நடிகை ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் அர்ஜுன் தாஸுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இருவரும் காதலித்து வருவதாக தெரிவித்து வந்தனர்.

arjun das aishwarya lekshmi

அதே சமயம் விரைவில் திருமணம் செய்து கொள்வதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கள் எழுந்து வந்தது. பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்த சூழலில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்துள்ளார். அதன் படி, நண்பர்களே நான் கடைசியாக வெளியிட்ட புகைப்படம் இவ்வளவு பெரிய விஷயமாகும் என எதிர்பார்க்கவில்லை.

அதே போல் நாங்கள் இருவரும் ஒரே படத்தில் படப்பிடிப்பில் சந்தித்துக் கொண்டதாகவும், எங்களுக்குள் காதல் எல்லாம் ஒன்றுமில்லை என விளக்கம் கொடுத்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...