Entertainment
வைரலாகும் நடிகர் அர்ஜூனின் பாட்டில் சேலஞ்ச்
அர்ஜூன் தான் அறிமுகமான அந்த கால கட்டத்தில் இருந்து சினிமாவில் தனக்கு தெரிந்த சண்டைக்கலைகளான, கராத்தே, குங்பூ போன்ற கலைகளை தான் நடித்த படங்களில் பயன்படுத்துபவர்.

இப்போதும் உடல் சார்ந்த அனைத்து பயிற்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர் இவர்.
இவரின் பாட்டில் சேலஞ்ச் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தன் கண் முன்னே இருக்கும் பாட்டிலின் மூடியை மட்டும், பாட்டில் கீழே விழாமல் தட்டி விடுவதுதான் சேலஞ்ச் அதை இயல்பாக அழகாக செய்திருக்கிறார் அர்ஜூன்.
இந்த பாட்டில் சேலஞ்சை பலரும் முயற்சித்து செயல்படுத்தி வருகின்றனர்.
