ஆபாச படங்களை காட்டி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் தலைமறைவு- போலீஸ் தீவிர தேடுதல்

ஆபாச படங்களை காட்டி மாணவிகளை மிரட்டுவது, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற அடாவடிகளில் எத்தனை முறை எத்தனை பேர் ஈடுபட்டாலும அவர்களுக்கு எப்பேற்பட்ட கடுமையான தண்டனை கொடுத்தாலும் சில காமுகர்கள் திருந்துவதாய் இல்லை.\

சில நாட்களுக்கு முன்புதான் கோவையில் இது போல் ஒரு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததில் ஒரு மாணவி உயிரிழந்தார்.

இப்படி அன்றாடம் ஏதாவது நடக்கும் நிலையில் அதற்குரிய தண்டனைகளும் கொடுக்கப்பட்டுதான் வருகிறது. இது டிஜிட்டல் யுகம் என்பதால் சமூக வலைதளங்களில் இது பற்றி கடும் எதிர்ப்பு எழுவதால் உடனே விசாரணை வேகம் பெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனர்.

இருப்பினும் ஒன்றும் சொல்வதற்கில்லை என்பதற்கேற்ப பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குறிச்சிகுளம் என்ற கிராமத்தில் ஆதிதிராவிடர் ஊராட்சி ஒன்றிய  பள்ளி இயங்கி வருகிறது.

இங்கு அதிக மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில்இங்கு, அறிவியல் ஆசிரியராக பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம்  என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர், மாணவிகளிடம் ஆபாச புகைப்படங்களை காட்டி இரட்டை அர்த்த வார்த்தைகளால் பேசி பாலியல் தொந்தரவு செய்து வருவதாக பெற்றோர்களிடம் மாணவிகள் புகார் செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், நேற்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து அரியலூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மாணவிகளிடம் விசாரித்தனர்.

பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என  போலீசாரும் கூறினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. தலைமறைவான ஆசிரியர் ராஜமாணிக்கத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment