பண மோசடி வழக்கில் அரியலூர் சுயேட்சை வேட்பாளர் கைது! அட இவரு அதிமுக பிரமுகரப்பா!

வருகின்ற 19ஆம் தேதி நம் தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இவை ஒரே கட்டமாக தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 74 ஆயிரத்துக்கும் அதிகமான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் தேர்தல் நெருங்கி விட்டதால் ஆங்காங்கே தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பலரும் மக்களை கவரும் விதமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் வேட்பாளர்கள் பற்றி அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி கொண்டே வருகிறது.

அந்த வரிசையில் சுயேட்சை வேட்பாளர் பண மோசடி வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் 16வது வார்டு சுயேட்சை வேட்பாளர் மணிவேல் பண மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜாகிர் உசேன் என்பவரின் கடையில் இரும்புக்கம்பி வாங்கிவிட்டு ரூபாய் 4.52 லட்சம் தராமல் ஏமாற்றியதாக சுயேட்சை வேட்பாளர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதிமுக பிரமுகரான மணிவேலுக்கு வாய்ப்பு தராததால் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment