Connect with us

நீண்ட தலைமுடியுடன் பகவான் படத்திற்கு தயாரான ஆரி…

Entertainment

நீண்ட தலைமுடியுடன் பகவான் படத்திற்கு தயாரான ஆரி…

39d1663ac7ea441f3c254e37a744b82b

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். 

அதேபோல் ஆரிக்கு கோடிக்கான ரசிகர்கள் உருவாகி விட்டனர் அதற்கு முக்கிய காரணமாக அவரது நேர்மையும், மன உறுதியும், சமூக அக்கறையும் ஒரு காரணம். இப்படி  எந்தவித எதிர்பார்ப்புமின்றி களமிறங்கி இன்று அனைவரையும் கவர்ந்திருக்கும் ஆரி நிச்சயம் பிக்பாஸ் வரலாற்றில் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆரிக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளது. ஆனால் ஏற்கனவே அவர் கமிட்டான படங்கள் அடுத்தடுத்து ஷூட்டிங் மற்றும் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. அப்படி பிக்பாஸ் வீட்டில் இருந்த பொழுது அவரது ‘பகவான்’ என்ற படத்தின் மிரட்டலான பஸ்ட் லூக் போஸ்டர் மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. நேற்று (மார்ச் 4) திருவண்ணாமலை செஞ்சி கோட்டைக்கு அருகில் அடுத்தஷெட்யூல் தொடங்கியுள்ளது. இந்த செய்தியை தனது சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார். பகவான் படத்தின் கெட்டப்பான நீண்ட தலைமுடியுடன் இருக்கும் ஆரி ரசிகர்களுடன் உரையாடி அவர்களது வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். மேலும் அவர்களுடன் எடுத்த செல்பியையும் பகிர்ந்துள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top