பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி, தனது ரசிகர் ஒருவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய வீட்டிற்குச் சென்று இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்
பிக் பாஸ் டைட்டில் பட்டம் வென்ற ஆரிக்கு ரசிகர்கள் பெருமளவில் குவிந்து உள்ளார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது முதல் நாள் முதல் தனக்கு ஆதரவு கொடுத்து சமூக வலைத்தளங்களில் பாசிட்டிவ் கமென்ட்ஸ்களை பதிவு செய்த வெறித்தனமான ரசிகர் ஒருவருக்கு பிறந்த நாள் என்பதை தெரிந்துகொண்டார்
இதனை அடுத்து அவருக்கு எந்தவிதமான முன் தகவலும் தெரிவிக்காமல் திடீரென அவரின் வீட்டின் போய் நின்றார் ஆரி. அவரை பார்த்த ரசிகரும் அவருடைய மனைவியும் இன்ப அதிர்ச்சி ஆகி அவரை அன்புடன் வரவேற்றனர்
அதன் பின்னர் ஆரியின் ஆசியுடன் பிறந்தநாள் கேக் வெட்டி அந்த ரசிகர் ஆரிக்கு கேக் ஊட்டினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது ரசிகருடைய பிறந்தநாளுக்கு அவருடைய வீட்டிற்குச் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆரியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்