டாஸ்க்கில் வெற்றி பெற சட்டையை கழட்டிய ஆரி! பாலாஜி கொடுத்த தீர்ப்பு!

10bfed4a4227b45e21fb550abb4aeced

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க் என்று வந்து விட்டால் வேற லெவலாக ஆரி விளையாடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்தவகையில் நேற்று பற்களை சுத்தம் செய்யும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது 

ஆரி தலைமையிலான ஒரு அணியும் ரியோ தலைமையிலான ஒரு அணியும் இந்த டாஸ்க்கில் விளையாடி கொண்டிருந்த நிலையில் ஆரி அணியினர் மிக சிறப்பாக செயல்பட்டு பல்லை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு கட்டத்தில் சுத்தம் செய்வதற்கு தேவையான பேப்பர் இல்லாததால் உடனடியாக தனது டீ-சர்ட்டை கழட்டி பல்லை சுத்தம் செய்தார் ஆரி. ஒரு டாஸ்க்கில் மிகவும் ஈடுபாட்டுடன் விளையாடியதைப் பார்த்து சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் ஆரியை ஆச்சரியமாக பார்த்தனர்

344e696c8bca328c4d6d96cce3055ccd

இருப்பினும் ஆரி தலைமையிலான அணி வெற்றி பெறவில்லை என்றும் ரியோ தலைமையிலான அணிதான் வெற்றி பெற்றதாக நடுவர் பாலாஜி தீர்ப்பளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது சட்டையை கழட்டி ஈடுபாட்டுடன் விளையாடிய போதிலும் ஆரி அணிக்கு வெற்றி என்ற தீர்ப்பு வராதது ஆச்சரியமாகத்தான் இருந்தது. இருப்பினும் நடுவர் முடிவில் யாரும் தலையிட முடியாது என்பதால் நடுவர் பாலாஜி கொடுத்த தீர்ப்பின்படி ஆரி தோல்வியடைந்ததாக கருதப்படுகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.