’போடா வாடா’ என பேசிய ஆரி: கொந்தளித்த பாலாஜி!

1ccfeae1ecb9275c67e5f5fc703efaca

பிக்பாஸ் வீட்டில் ஆரியும் பாலாஜியும் ஆரம்பம் முதலே எலியும் பூனையும் போல அடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்று மீண்டும் இருவருக்கும் இடையே மோதல் நடைபெறுகிறது 

இன்று மோசமான பெர்பார்மன்ஸ் செய்தவர்கள் குறித்த தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பாலாஜியை ஆரி நாமினேட் செய்கிறார். அப்போது பாலாஜி கேப்டனாக இருந்தபோது நடந்ததை ஆரி கூற முயற்சி செய்யும்போது அதனை தடுக்கும் பாலாஜி ’இந்த வாரம் என்ன நடந்ததோ அதை மட்டும் பேசுங்கள் என்று கூற அதற்கு ’நான் என்ன சொல்ல வேண்டும் என்பதை நீ எனக்கு சொல்ல தேவையில்லை, வேண்டும் என்றால் நீயும் வந்து சொல்டா’ என்று கூறினார் 

இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி ’இதுநாள் வரை நான் பொறுத்துக் கொண்டு இருந்தேன், இனிமேல் பொறுத்துக்கொள்ள முடியாது, வந்து சொல்டா என்றால் என்ன அர்த்தம்? என்று கோபமாக கேட்க இருவரும் கிட்டத்தட்ட மோதும் சூழலில் இன்றைய முதல் புரமோ வீடியோ முடிவடைந்துள்ளது 

617cb3051b18b73f196762e8f4b9b7f2

பாலாஜி ஆரி ஆகிய இருவரும் ஏற்கனவே பல முறை மோதியுள்ளனர் என்பதும் அப்போதெல்லாம் போடா வாடா என்று ஆரி பேசியபோது பாலாஜி ஆத்திரமடையவில்லை என்பதும் இன்று புதிதாக அவர் ஆத்திரம் அடைந்து இருப்பது ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் சக போட்டியாளர் ஒருவரை விளையாட்டுக்காக போடா வாடா என்று சொல்வதும் நாமினேஷன் செய்யும்போது சொல்வதிலும் வித்தியாசம் இருக்கிறது என்றும் ஆரி செய்தது இந்த விஷயத்தில் தவறு தான் என்றும் கமெண்ட்கள் பதிவாகி வருகிறது

இந்த சண்டை அடுத்த வார நாமினேஷன் மற்றும் எவிக்சனிலும் எதிரொலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.