பிக்பாஸ் வீட்டில் கடந்த 98 நாட்களில் கேப்டனாக இருந்த வாரம் தவிர கிட்டத்தட்ட அனைத்து வாரங்களிலும் ஆரி சக போட்டியாளர்களால் நாமினேஷன் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் அதே நேரத்தில் மக்களின் பேராதரவு அவருக்கு இருப்பதால் அவர் தான் முதலில் சேவ் செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரியை எப்படியாவது வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று அர்ச்சனா தலைமையிலான குழு தீவிர முயற்சி செய்தும் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் அவர் முதலில் சேவ் செய்யப்பட்டு வந்ததால் அர்ச்சனாவால் கடைசி வரை அது முடியாமல் போனது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் கடைசி நாமினேஷனிலும் ஆரி முதலாவதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று ஆரி சேவ் செய்யப்பட்டதாக கமல்ஹாசன் அறிவித்தவுடன் தான் ஃபைனலுக்கு தகுதி பெற்றதை அறிந்து மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு தரையில் ஓங்கி அடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சசிகலா சிறை செல்லும் முன் ஜெயலலிதாவின் சமாதியில் தரையில் ஓங்கி அடித்ததை இது ஞாபகப்படுத்துவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
தற்போது ஆரி மற்றும் சோம் ஆகிய இருவரும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பதும் இன்னும் யாரெல்லாம் யாரெல்லாம் தகுதி பெறுவார்கள் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்