நிஷாவிடம் மனம்விட்டு பேசி கண்ணீர் சிந்திய ஆரி!

9ef9a563b3b771752eb2b87b3822372d-1

பிக் பாஸ் வீட்டில் நேற்று அர்ச்சனா, நிஷா, ரமேஷ் மற்றும் ரேகா ஆகிய நால்வரும் சிறப்பு விருந்தினராக வந்தார்கள் என்பதும் அவர்கள் சக போட்டியாளர்களுக்கு உற்சாகப்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்கள் என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் பாலாஜி மற்றும் ரம்யாவுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் அர்ச்சனா நடந்து கொண்டார் என்பதும் அவர்களுக்கு மறைமுகமாக சில டிப்ஸ்களை கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

dbc069663a6ac4752f46fc3b886135b6

ஆனால் அதே நேரத்தில் நிஷாவிடம் ஆரி மனம் விட்டு சில விஷயங்களை பேசி உள்ளார். தான் இந்த வீட்டில் வந்ததிலிருந்து யார் மீதும் பொறாமைபட்டது இல்லை என்றும் ஆனால் தான் சொல்லும் அறிவுரைகளை தவறாக புரிந்து கொண்டு நான் பொறாமைபட்டதாக என்னை நான்கு முறை ஜெயிலுக்கு அனுப்பி இருக்கிறார்கள் என்றும் மன வருத்தத்துடன் கூறினார்

ஒரு கட்டத்தில் ஆரி லேசாக கண்ணீர் சிந்தியதால் பதறிப்போன நிஷா வெளியில் உங்களை யாருமே தவறாக நினைக்க மாட்டார்கள் என்றும் இந்த வீட்டில் 70 நாட்களில் இருந்த எனக்கு தெரியும், பொறாமை என்பது உங்கள் மனதில் கொஞ்சம் கூட இல்லை என்றும் அவர் ஆறுதல் கூறினார். நிஷாவிடம் ஆரி மனம்விட்டுப் பேசிய காட்சிகள் நேற்று நெகழ்ச்சியாக இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.