சுரேஷுக்கும்-பாலாஜிக்கும் இடையே வாக்குவாதம்! சண்டை தடுக்க வந்த நான் என்னையா செஞ்சேன்? பீல் பண்ணும் தாடி பாலாஜி….!

பிக்பாஸ் அல்டிமேட் மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்று வருகிறது. ஏனென்றால் முழுவதாக மூன்று நாள் கூட முடியாத நிலையில் தினம் தோறும் வீட்டில் சண்டைகள் பிரச்சினைகள் நடந்துகொண்டு வருகிறது.

இது பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த சுவாரஸ்யம் எதிர்பார்ப்பையும் அள்ளிக் கொடுக்கிறது. அதன்படி இன்று பிக்பாஸ் அல்டிமேட் ஒரு டாஸ்க் ஒன்றை ஏற்படுத்தியது. அதில் ஒரு பிரிவினர் செலிபிரிட்டிகளாகவும், ஒரு பிரிவினர் பத்திரிக்கையாளர்கள் ஆகவும் இருக்க வேண்டும் என்று கூறியது.

செலிபிரிட்டி ஆக வரும் பிக்பாஸ் போட்டியாளரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து அடுத்தடுத்து கேள்விகளை கேட்பார்கள். அந்த வரிசையில் பாலாஜி முருகதாஸ் செலிபிரிட்டி ஆக சேரில் அமர்ந்து இருக்கும் போது தாடி பாலாஜி கேள்வி கேட்டார்.

அதற்கு விளக்கம் அளித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென்று சுரேஷ் சக்கரவர்த்தி இடையில் பாலாஜியிடம் குறுக்கிட்டார். அதன்பின்னர் லிவிங் ஏரியாவில் பாலாஜி முருகதாஸ் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

அப்போது சுரேஷ்  நான் இந்த வாரம் வெளியே போனாலும் கவலையில்லை என்று கூறினார். இடையே குறுக்கிட்ட தாடி பாலாஜி விடுங்களேன் என்று கூற, யாரும் வராதீர்கள் விடுங்க விடுங்க சொன்னால் ஒரேடியாக விடுவேன் என்று தாடி பாலாஜியை பங்கம் செய்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment