add_filter( 'wp_lazy_loading_enabled', '__return_false' );கொரோனாவுக்கு டாட்டா போட ரெடியா மக்களே? இந்தியாவில் பாதிப்பு இவ்வளவுதானா....!!! - Tamil Minutes
Connect with us

கொரோனாவுக்கு டாட்டா போட ரெடியா மக்களே? இந்தியாவில் பாதிப்பு இவ்வளவுதானா….!!!

கொரோனா

News

கொரோனாவுக்கு டாட்டா போட ரெடியா மக்களே? இந்தியாவில் பாதிப்பு இவ்வளவுதானா….!!!

கொரோனாவுக்கு டாட்டா போட ரெடியா மக்களே? இந்தியாவில் பாதிப்பு இவ்வளவுதானா….!!!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதுவும் குறிப்பாக மூன்று லட்சம் வரையும் தினசரி பாதிப்பு எட்டும் நிலைமைக்கு கொரோனாவின் பரவல் அதிகமாக காணப்பட்டது.

எனவே ஒவ்வொரு மாநில அரசும் தங்களது மாநிலங்களில் கட்டுப்பாடுகளை அதிதீவிரமாக அறிவித்தனர். இதன் விளைவாக மீண்டும் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதாக காணப்படுகிறது, அதுவும் குறிப்பாக இந்தியாவில் இவ்வளவுதான் கொரோனாவா? என்று ஆச்சரியப்படத்தக்க வகையில் கொரோனாவின் ஒருநாள் பாதிப்பு பதிவாகியுள்ளது.

அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 13 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 119 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 13 ஆயிரத்து 743 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் வைரஸ் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 601 ஆக உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 775 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் இதுவரை 4 கோடியே 23 லட்சத்து 7 ஆயிரத்து 686 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top