தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதில் தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றதும் முதன்முறையாக கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி 2021- 2022ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இதில் பயிர்கடன் தள்ளுபடி எப்போது நிறைவேற்றப்படும் என விவசாயிகள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் பயிர்கடன் தள்ளுபடிக்காக 2531 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.