நீங்கள் ரேஷன் கார்டு வைத்திருக்கிறீர்களா? வேற லெவல் செய்தி அறிவிப்பு!

பொதுவாகவே அனைத்து பொருட்களும் குறைவான விலையில் கிடைக்கும் இடம் எது என்று கேட்டால் அனைவரும் கூறுவது நியாயவிலைக்கடை தான். இங்கு இலவச பொருட்கள் வழங்கப்படும். இந்த நியாய விலை கடையில் பொருள் வாங்குவதற்கு கட்டாயம் ரேஷன் கார்டு தேவை.

இந்த சூழலில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது கொண்டாட்டம் அளிக்கும் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி சிறப்பு பொது விநியோகத் திட்டம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு பொது விநியோகத் திட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் வாயிலாக பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது விநியோகத் திட்டம் 2021 மார்ச் மாதம் தொடங்கிய 2001 டிசம்பர் வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்று ஏற்கனவே வெளியாகி இருந்தது.

ஆனால் இந்த திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் ஆணையர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்று உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் சிறப்பு பொது விநியோகத் திட்டம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக 2022ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை சிறப்பு விநியோகத் திட்டம் நடைமுறையில் இருக்கும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதையும் பாருங்கள்:

ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை ₹1000! தமிழக அரசு விலை நிர்ணயித்த உத்தரவு!!

மாஸ்க் போடாமல் ரயில்நிலையத்தில் சுற்றினால் 500 ரூபாய் அபராதம்! 10ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்….

மீண்டும் வில்லனாக மிரட்ட வரும் பிரபல இயக்குனர்…. இனிமே டைரக்ஷன் கிடையாது போல…..

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு நாளில் ரயில் போக்குவரத்து இருக்குமா? பதில் தந்தது தெற்கு ரயில்வே!

டைப்பிங்க் தெரிந்திருந்தால் போதும். 12 ஆம் வகுப்பு படித்தவருக்கு JUNIOR ASSISTANT வேலை!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment