இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவரா நீங்கள்? எச்சரிக்கும் காவல்துறையினர் !!

திருவண்ணாமலையில் இன்ஸ்டாகிராமில் வெவ்வேறு புகைப்படங்களை பயன்படுத்தி நூற்றிற்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழ வைத்து பல லட்சம் ரூபாய் வாங்கிய நபரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியினை சேர்ந்தவர் பாலாஜி. இவரது புகைப்படத்தை அதே பகுதியை சேர்ந்த பயாஸ் என்ற இளைஞர் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பல பெண்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி பணமோசடியில் ஈடுப்பட்டுள்ளார்.

இதனிடையே பெண் பேசுவது போல பயாஸ்சுக்கு பாலாஜி குறுஞ்செய்தி அனுப்பி புதுக்கோட்டை மைதானத்திற்கு வரவழைத்து தனது புகைப்படங்களை பயன்படுத்துவதை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

அப்போது பயாஸ் பாலாஜியை தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பாலாஜி கொடுத்த புகாரின் அடிப்படையில் பயாஸ்சை போலீசார் கைது செய்தனர். பயாஸ்ஸின் செல்போனை சோதனை செய்து பார்த்ததில் அவர் 100-க்கும் மேற்பட்ட பெண்களை காதலிப்பது போல் நடித்து பணமோசடியில் ஈடுப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இன்ஸ்டாகிராமில் காதல் வலை வீசிய மன்மதனை போலீசார் கைது செய்து நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சோசியல் மீடியாவை உஷாராக பயன்படுத்த வேண்டும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment