Connect with us

என்ன சொல்றீங்க..! பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இவர்கள் தான் காரணமா?

பெட்ரோல்

தமிழகம்

என்ன சொல்றீங்க..! பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இவர்கள் தான் காரணமா?

என்ன சொல்றீங்க..! பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இவர்கள் தான் காரணமா?

கடந்த காலங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் மக்கள் மீது அந்த சுமையை ஏற்றுவதை தவிர்க்குமாறு எண்ணெய் விநியோக நிறுவனங்களை அரசு கேட்டுக் கொள்ளும். இதனால் அந்நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசே செலுத்தும்.

அதாவது பணமாக செலுத்துவதற்கு பதிலாக பத்திரமாக செலுத்தும். அதன்படி, குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு பெருந்தொகையை செலுத்துவதாக பத்திரம் செலுத்தப்பட்டு ஆண்டுதோறும் அதனை ஈடுகட்டும் வகையில் வட்டியுடன் குறிப்பிட்டு விழுக்காட்டில் தொகையை செலுத்தி வரும்.

இவற்றின் மூலம் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மக்கள் பாதிப்படைவதை தவிர்த்தும் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை அரசு தவிர்க்கும். ஆனால் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட் ட ஆட்சியில் கடன் பத்திரங்கள் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் 2014- ஆம் ஆண்டில் பிரதமர் மோடி பதவியேற்கும் போது 1.34 லட்சம் கோடி எண்ணெய் பத்திரங்கள் இருந்தன. இவற்றிற்கு 2026- ஆண்டு வரை அசல், வட்டி செலுத்த வேண்டும் என்பதால் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முடியாது என அண்மையில் நிதியமைச்சர் சீதாராமன் கூறியுள்ளார்.

இதனிடையே 1.34 ஆயிரம் கோடி கடன் தொகையில் ஆளும் பாஜக திருப்பி செலுத்தி உள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே கடன் பத்திரத்தை திருப்பி செலுத்த பெட்ரோல், டீசல் மீது அதிக வரியினை விதிப்பதால் கடனை தடுக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலை கூறுகின்றனர் பொருளாதார வல்லுனர்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top