
தமிழகம்
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் இவ்வளவு ரயில் பிரச்சனையா?
இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள பல இடங்களில் ரயில் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது .அதன்படி முதலில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் சரக்கு ரயில் திடீரென்று தண்டவாளத்தில் தடம் புரண்டு விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லி ஏற்றுவதற்காக கோடியாக்கரையில் இருந்து திருத்துறைப்பூண்டி சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டுள்ளது. ரயில் கேட் இடையே விபத்து ஏற்பட்டதால் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் விருத்தாச்சலம் அருகே ரயில்கள் தாமதமாக செல்வதாக தகவல் கிடைத்துள்ளது. விருத்தாச்சலம் ஜங்ஷன் அருகே நாச்சியார் பேட்டை ரயில்வே கேட்டில் உள்ள சிக்னல் கம்பத்தில் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
லாரி மோதிய விபத்தில் சிக்னல் விளக்கு எரியாததால் சென்னை திருச்சி செல்லும் அனைத்து ரயில்களும் தாமதமாக செல்கின்றன.
இன்று ஒரே நாளில் இரண்டு விதமான இடங்களில் ரயில் பிரச்சனை ஏற்பட்டது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.
