அவகேடோ ஆயிலை சமையலுக்குப் பயன்படுத்தினால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

எண்ணெய்யையும், இந்திய சமையலையும் வெவ்வேறாக பிரிந்து பார்க்க முடியாது. குழம்பு தாளிப்பதில் ஆரம்பித்து பஜ்ஜி பொறிப்பது வரை இந்திய சமையலை உணவுகள் அனைத்துமே எண்ணெய்யை சார்ந்தே உள்ளன. அதேசமயம் நாம் உட்கொள்ளும் எண்ணெய் தான் நமது ஆயுட்காலத்தையும் தீர்மானிக்கிறது. சமையலுக்கு தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், பாமாயில் போன்ற பலவகையான எண்ணெய் வகைகளை நாம் பயன்படுத்துகிறோம். இவை அனைத்திலும் கொழுப்புச் சத்து அதிகமுள்ளது, எனவே உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு மாற்று எண்ணெய் உபயோகத்தை ஆரம்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஆரோக்கியமான எண்ணெய் வகைகளுக்கு மாறுவதை பற்றி நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தால், அவகேடோ எண்ணெய் சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் அவகேடோ எண்ணெய்யில் ஒமேகாஸ் 3 மற்றும் 9 போன்றவற்றுடன், ஏ, டி, ஈ, கே ஆகிய மல்டி வைட்டமின்கள் அடங்கியுள்ளன. அவகேடோ எண்ணெய்யில் அடங்கியுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

அவகேடோ எண்ணெய்க்கு மாறுவதால் கிடைக்க கூடிய முக்கியமான 5 நன்மைகள் குறித்து பார்க்கலாம்…

1. நொறுக்குத்தீனியை ருசிப்பதில் தடையில்லை:

1. குற்ற உணர்ச்சியற்ற சிற்றுண்டி

இந்தியர்கள் எப்போதுமே நொறுக்குத் தீனி பிரியர்கள், பக்கோடா, பஜ்ஜி, சமோசா, ஜிலேபி என பெரும்பாலான சிற்றுண்டி வகைகள் எண்ணெய்யில் பொறிக்கப்படுகின்றன. அவகேடோ எண்ணெய் அதிகபட்சமாக 260 டிகிரி வரை சூடாக்கூடியது என்பதால், உணவை அதன் சுவையை இழக்காமல் சமைக்க சிறந்தது. மேலும் அவகேடோ எண்ணெயின் கொதிநிலை அதிகம் என்பதால், அதிக அளவில் கொதிக்கவைக்கப்படும் எண்ணெய் மூலமாக உருவாகும் புற்றுநோய், கெட்ட கொலஸ்ட்ரால் போன்றவை தடுக்கிறது.

2. இரத்த அழுத்தம், கொலஸ்ட்ராலை குறைக்கும்:

அவகேடோ எண்ணெய்யில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் வரையறுக்கப்பட்ட நிறைவுற்ற கொழுப்புக்கள் உள்ளன. இது உடலில் தங்கும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. இந்த எண்ணெயில் அதிக அளவில் உள்ள வைட்டமின் ஈ, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ரத்த நாளங்களை பாதுகாக்கிறது. சிறுநீரகங்களில் உள்ள கொழுப்பு அமிலங்களின் அளவை சமன் செய்வதோடு, ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

3. மூட்டுக்கள், சருமத்தை பாதுகாக்கும்:

கோடை மற்றும் மழைக்காலத்தில் மூட்டு திரவத்தின் அளவு மாறுவதால், மூட்டுவலி, விறைப்புத் தன்மை போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அவகேடோ எண்ணெய்யை பயன்படுத்தினால் அது மூட்டுகளை வலிமையாக வைத்திருக்க உதவும் என ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவகேடோ எண்ணெய்யை உணவில் சேர்த்துக்கொள்வது நல்ல பலனைத் தரும்.

அதேபோல் மழைக்காலத்தில் சருமத்தில் ஏற்படக்கூடிய பூஞ்சை தொற்று, அலர்ஜி போன்ற பிரச்சனைகளை அவகேடோ எண்ணெய்யில் உள்ள ஒமேகா – 3, வைட்டமின் ஈ ஆகியவை பயன்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஒமேகா – 3, தடிப்பு, தோல் அழற்சி, அரிப்பு, முகப்பரு, சொறி, மருக்கள் போன்ற சரும பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

4. ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது:

கரோட்டினாய்டுகள், டோகோபெரோல்கள் மற்றும் தாவர ஸ்டெரால்கள் போன்ற ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடக் கூடிய விஷயங்கள் அவகேடோ எண்ணெயில் நிறைந்துள்ளது. இந்த எண்ணெயை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், அதிலுள்ள ஒமேகா – 3 மற்றும் சில ஆக்ஸினேற்ற பண்புகள் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை கூட குறைக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

5. ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுதல்:

அதிக அளவு மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளைக் கொண்ட அவகேடோ ஆயில், உடலின் செயல்பாட்டிற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகிய ஊட்டச்சத்துக்களை உடல் உட்கிரகிக்க உதவுகிறது. குறிப்பாக, ஆல்பா மற்றும் பீட்டா கரோட்டின் மற்றும் லுடீன் அளவை அதிகரிக்கிறது. இது உடலின் நோயெதிர்ப்பு சக்தி மற்றும் பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
oil