ஆத்தாடி!! வாக்குச்சாவடிகளில் இதனை கட்டுப்பாடுகளா?
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு நடக்கும் அன்று வாக்குச்சாவடி மையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் முகவர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்போனில் பேசுவது கூடாது. புகைப்பிடிப்பதையும், குடிப்போதையில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
வாக்குப்பதிவு அறைக்குள் (Voting Compartment) வாக்காளர்களை தவிர வாக்குச்சாவடி முகவர்களோ, வாக்குப்பதிவு அலவலர்களோ, பிற நபர்களோ செல்லக்கூடாது என தெரிவித்துள்ளது.
பேலட் யூனிட்டில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டிருக்கும் சமயத்தில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் முகவர்களின் முன்னிலையில் மட்டுமே அதை சரிசெய்ய வேண்டும் என கூறியுள்ளது.
முகவர்களை தங்களுடைய வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட ஆவணங்களை வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் ஒப்படைத்துவிட்டு வெளியில் செல்லவும், மீண்டும் உள்ளே வரவும் அனுமதிக்கலாம் என தெரிவித்துள்ளது.
முக்கிய பிரமுகர்கள் வரும்போது அவர்களுக்கு சிறப்பு உபசரணைகள் வழங்கக் கூடாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
