செப்டம்பர் 15 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படுகிறதா?

645f0f780d038ba1b8bbf7deabeb7d56

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிகளில் மாணவர்கள் 50 சதவீத மாணவர்கள் சுழற்சி முறையில் வருகை தரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் விதிமுறைகளை, வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தநிலையில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு செப்டம்பர் 15 முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்றும் கூறப்படுகிறது

தமிழகத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் இயல்பு நிலை திரும்பி நிலையில் பள்ளிகளும் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment