தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளை மூட தமிழக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. கொரோனா காரணமாக கல்வி நிலையங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடுமுறை விடப்பட்டிருந்தது.
கொரோனா பரவல் குறைந்ததையடுத்து செப்டம்பர் மாதம் முதல் மாணவர்களுக்கு படிப்படியாக நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இப்பொழுது தான் மாணவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில் புதியதாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் ஒமிக்ரான் அறிகுறி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம், தற்போது ஒமிக்ரான் தொற்று பரவும் நிலையில் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒமிக்ரான் தொற்று தமிழகத்தில் அதிகரிக்கும் நிலையில் அதைத் தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் ஒமிக்ரான் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும் என்று மருத்துவர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.