காரைக்குடி மீன் சந்தையில் அனைத்து மீன்களும் கெட்டுப்போன மீன்கள் என கூறியதால் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட மீன் சந்தையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது தரமற்ற மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் கூறினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அப்போது ரசாயனத்தை சோதனை செய்தபோது அதில் குறைப்பாடுகள் இருப்பதை கண்டுப்பிடித்தனர்.
இதனையடுத்து அவர்கள் மீன்சந்தையில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், அதிகாரிகள் கொண்டுவந்த ரசாயனத்தில் குறைபாடுகள் இருப்பதை கூட அறியாமல் மீன்கள் மீது குற்றம் சாட்ட படுவதாக வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.