4000 வீடுகளுமே ஆக்கிரமிப்பு வீடுகளா? நோட்டீஸ் ஓட்டியதால் தர்ணா போராட்டம்!

முன்னொரு காலத்தில் தமிழகத்தில் அதிக அளவு ஆறுகள்,ஏரிகள் எண்ணிக்கை காணப்பட்டது. குறிப்பாக தலைநகர் சென்னையை சுற்றிலும் அதிகளவில் காணப்பட்டது. ஆனால் தற்போது பல ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அங்கு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இதன் விளைவாக ஒரு கன மழை பெய்தால் கூட வீடுகள் முழுவதும் மழை நீருக்குள் மூழ்கி விடுகின்றன. இந்த சூழலில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டதாக 4000 பேர் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சென்னை ஈச்சம்பாக்கம் அருகே நிகழ்ந்தது.

இதனால் ஈச்சம்பாக்கம் அருகே உள்ள குடியிருப்பு வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரிலுள்ள குடியிருப்பு வாசிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆக்கிரமிப்பு வீடுகள் என கூறி 4000-த்திற்கும் மேற்பட்ட வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது என குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

தர்ணாவில் ஈடுபட்டு மக்களுடன் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் இணை ஆணையர் பேச்சுவார்த்தை நிகழ்த்துகின்றனர். நோட்டீசை திரும்ப பெற வேண்டும் எனவும் பட்டா வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment