Tamil Nadu
திரையரங்குகளில் 100% இருக்கைகள் அனுமதிக்கப்படுமா? கடம்பூர் ராஜூ தகவல்
தமிழகத்தில் ஜனவரி 31-ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று தமிழக அரசு சற்று முன் அறிவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த அறிவிப்பில் திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகள் அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது
குறிப்பாக தமிழக முதல்வரை விஜய் சந்தித்ததிலிருந்து இந்த அறிவிப்பு வெளிவருவது உறுதி என்றும் கூறப்பட்டது. ஆனால் ஜனவரி 31 வரை திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் சற்று முன் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் 100 சதவீதம் இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்
வரும் பொங்கல் தினத்திற்குள் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி ஒரு அறிவிப்பு வெளிவரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
