இந்த பக்கம் வராதீங்க… காவல்துறை கடும் எச்சரிக்கை!

பொன்னேரி அருகே ஆரணியாற்றில் 3வது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கிய நிலையில் போலீசார் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை தடை செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆரணியாற்றில் வெள்ள பெருக்கு காரணமாக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால், போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திலும், ஆந்திராவிலும் நேற்று பரவலாக கனமழை பெய்த நிலையில் ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆரணியின் அருகே காரணி கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.

இதே போல மங்களம் கிராமத்திற்கு செல்ல ஆற்றின் குறுக்கே மக்கள் பயன்படுத்தி வந்த பாதையும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. ஆற்றில் சுமார் 2அடி உயரத்திற்கு தண்ணீர் செல்லும் நிலையில் காவல்துறையினர் இந்த தரைப்பாலத்தின் முன் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை தடை செய்தனர். போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் காரணி, நெல்வாய், புதுப்பாளையம், மங்களம், எருக்குவாய் உள்ளிட்ட 10 கிராமங்களில் உள்ள மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பெரியபாளையம் வழியாக 10 கிலோ மீட்டர் சுற்றி வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள், அலுவலகம் செல்வோர், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்துள்ளனர். சிலர் 2அடி உயர ஆற்று வெள்ளத்தில் ஆபத்தை பொருட்படுத்தாமல் நடந்து சென்று ஆற்றை கடந்து செல்கின்றனர். வடகிழக்குப் பருவமழை துவங்கியதில் இருந்து 3வது முறையாக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவிலும் கனமழை காரணமாக ஆரணி ஆற்றில் மேலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் வழியே போக்குவரத்தை அனுமதிக்க சில நாட்கள் 20கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.