Connect with us

யூ-டியூபில் மீண்டும் மீண்டும் சாதனை படைத்து வரும் அரபிக்குத்து பாடல் !

1644916538901942 0

பொழுதுபோக்கு

யூ-டியூபில் மீண்டும் மீண்டும் சாதனை படைத்து வரும் அரபிக்குத்து பாடல் !

நடிகர் விஜய் நடிப்பில் தமிழ் புத்தாண்டு அன்று திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த திரைப்படத்தில் அவரின் நடிப்பு நன்றாக இருந்தாலும் கூட கிளைமாக்ஸ் தான் மக்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றியது.

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா நடித்திருந்தார். இந்த பீஸ்ட் திரைப்படத்தினை இயக்குனர் நெல்சன் இயக்கியிருந்தார். மேலும் தற்போது நெல்சன் ரஜினியை வைத்து ஜெயிலர் என்ற திரைப்படத்தினை இயக்கி வருகிறார்.

download 69

பீஸ்ட் திரைப்படத்தில் வெளியான அரபிக் குத்து என்ற பாடல் இன்றளவும் இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டு வருகிறது. மேலும் பலரும் இதற்கு டப்ஸ்மாஷ் செய்து கொண்டு வருகின்றனர். பீஸ்ட் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையில் அரபி குத்து என்ற பாடல் இணையத்தில் வெளியானது. இந்த பாடலுக்கு பாடலாசிரியராக நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நாமக்கல் ஓடிஎப்சி குழுவின் சார்பில் அரபிக் கூத்து பாடலுக்கு ரீ கம்போசிஷன் செய்து போல் தெரிகிறது. அந்த பாடலில் இளைஞர்கள் பலரும் தத்ரூபமாக நடனமாடியுள்ளனர் இதனை பார்த்த படத்தின் நாயகி பூஜாவுக்கு அவர்களை பாராட்டியுள்ளார் குறிப்பிடத்தக்கது.

Arabic Kuthu Mp3 Song Download from Beast Movie 2022 –

இமயத்தை தொட்ட அஜித் ! அசத்தலான பைக் ரைட் வீடியோ !

அரபி குத்து பாடலில் விஜயின் நடனம், காட்சியமைப்பு ஆகியவற்றால் ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. இதன்படி, அரபிக்குத்து பாடல் யூடியூபில் 25 கோடி பார்வையாளர்களை கடந்து உள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் டுவிட்டரில் தெரிவித்து உள்ளது. இதையடுத்து ரசிகர்கள் டுவிட்டரில் அரபிக்குத்து, விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை பகிர்ந்து கொண்டாடி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top