Connect with us

ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சி! எப்போ தெரியுமா? மாஸ் அப்டேட்..

ar rahman 1200

Entertainment

ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சி! எப்போ தெரியுமா? மாஸ் அப்டேட்..

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘ரோஜா’ படத்தின் மூலம் தன்னுடைய இசைப் பயணத்தை தொடங்கியவர் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான்.இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இவர் ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது, தேசியத் திரைப்பட விருது போன்ற பல புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார்.இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அமீன் மகனும், ரஹீமா, கதீஜா எனும் மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகளான கதீஜாவிற்கு சென்ற வருடம் டிசம்பர் மாத இறுதியில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது .

ar raku

ரியாசுதீன் ஷேக் முகமது, சவுண்ட் இஞ்ஜினியரை மருமகனாக்க உள்ளதாக ஏ.ஆர்.ரகுமான் சமூகவலைத்தளங்களில் அறிவித்திருந்தார்.ஏ.ஆர்.ரகுமான் மகள் கதீஜாவின் திருமணம் சில நாட்களுக்கு முன் எளிமையான முறையில் நடந்தது. இத்திருமண நிகழ்வில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள கதிஜா, ‘என் வாழ்வில் மிகவும் எதிர்பார்த்த நாள் இதுதான்’ என பதிவிட்டுள்ளார்.அதையடுத்து சென்னைக்கு அடுத்து ரஹ்மானுக்கு சொந்தமாக உள்ள இடத்தில் பிரம்மாண்டமாய் திருமண வரவேற்பை நடத்தியுள்ளார். இதில் ரஹ்மானிடம் இசை பயிற்சி பெறும் மாணவர்கள் அவருடைய இசை கலைஞர்களே மட்டுமே பங்கேற்றனர்.

மேலும் திரையுலகில் இருந்து பின்னணி பாடகி பி.சுசீலா மட்டுமே இந்த திருமண வரவேற்பில் பங்கேற்றார்.இந்நிலையில் ஜூன் 10ம் தேதி மகளின் திருமண வரவேற்பை பிரம்மாண்டமாய் நடத்த உள்ளார் ரஹ்மான்.

சமந்தா இல்லாமல் நயன்தாரா திருமணம்! காரணம் அதாக இருக்குமோ?

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Entertainment

To Top