அனிருத்துக்கு போட்டியாக அட்டகாசமான அஸ்திரத்தை இறக்கிய ஏ.ஆர். ரஹ்மான்!.. ராயன் 2வது சிங்கிள் எப்படி?

இந்தியன் 2 படத்திற்காக அனிருத் இசையமைத்த ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “பாரா” பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது அந்தப் பாடலுக்கு போட்டியாக ஏ.ஆர். ரகுமான் இசையில் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.

ராயன் 2வது சிங்கிள் எப்படி இருக்கு?

நடிகர் தனுஷ் ஏற்கனவே ராஜ்கிரண், ரேவதி, டிடி நீலகண்டன், பிரசன்னா உள்ளிட்டோரை வைத்து பவர் பாண்டி எனும் படத்தை இயக்கினார். கடைசி நேரத்தில் ஏற்பட்ட தலைப்பு சிக்கல் காரணமாக ப. பாண்டி என அந்த படம் வெளியானது.

அதில், ராஜ்கிரணின் யங்கர் வெர்ஷனாக தனுஷ் நடித்திருப்பார். ரேவதியின் இளம் வயது நடிகையாக மடோனா செபாஸ்டியன் நடித்திருப்பார். அந்த படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் படம் அடுத்த மாதம் வெளியாகிறது.

அடங்காத அசுரன் பாடல் இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெளியான நிலையில், தற்போது வாட்டர் பாக்கெட் எனும் செகண்ட் சிங்கிள் பாடல் இன்று வெளியானது. இந்தியன் 2 படத்திற்காக அனிருத் ஏ.ஆர். ரகுமான் ஸ்டைல் பாடல் போட்டு இருந்த நிலையில், வாட்டர் பாக்கெட் பாடல் அனிருத்தை விட தர லோக்கலாக ஏ.ஆர். ரகுமான் போட்டுள்ளார் என பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இந்தப் பாடலை பாடி உள்ள நிலையில் பாடல் மொத்தமே அவரது இசையில் உருவானதா என்கிற கேள்வியும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். சந்தீப் கிருஷ்ணன் மற்றும் அபர்ணா பாலம் முரளி இந்தப் பாடலின் நடித்துள்ள நிலையில், பாடலின் கடைசியில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் மாவு மில்லில் இருக்கும் காட்சிகளும் வெளியாகி உள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...