Entertainment
வைரலாகும் ஜிவி ப்ரகாஷ்-ஏ. ஆர் ரஹ்மானின் பழைய பொங்கல் வாழ்த்து
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் மருமகனாக தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக, இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார்.
ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த ஜென்டில்மேன் படப்பாடலான சிக்கு புக்கு சிக்கு ரயிலே பாடலையும் வேறு சில பாடல்களையும் ஜிவி பாடியுள்ளார்.

இவர் தனது மாமாவான ஏ.ஆர் ரஹ்மானுடன் இணைந்து உள்ள வீடியோக்களை அதுவும் பழைய வீடியோக்களை அதிகம் வெளியிடுவது வழக்கம்.
அப்படியாக இவர் வெளியிட்ட பொங்கல் வாழ்த்து ஒன்று வைரலாகி வருகிறது. தனது மாமா ரஹ்மானுடன் இணைந்து பொங்கல் வாழ்த்துக்களை சொல்லும் ஒரு வீடியோ ஆரம்ப காலத்தில் வந்தது என அறிய முடிகிறது. ஏனென்றால் சிறுவயதில் ஜிவி அந்த வீடியோவில் தோன்றுகிறார்.
