சர்கார் பட வழக்கில் ஏ.ஆர்.முருகதாஸ்-க்கு கிடைத்த வெற்றி!

8eb11dd7b5601e859339c5f05e3e23fc-1

பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த சர்கார் திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் வழக்கின் தீர்ப்பு சற்று முன் வெளியான நிலையில் இந்த படத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது

விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில் அரசு கொடுத்த இலவச பொருட்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்யப்பட்டதாகவும் இலவச பொருட்கள் தூக்கி குப்பையில் போட்டது போன்ற காட்சி உள்ளது என்றும் கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டது 
இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்சார் போர்டில் சான்றிதழ் வாங்கிய ஒரு திரைப்படத்தை தடை செய்ய முடியாது என்றும் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருந்தால் சென்சார் போர்டில் தான் மனுதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்ததாக தெரிகிறது

இதனை அடுத்து இயக்குநர் ஏஆர் முருகதாசுக்கு கிடைத்த வெற்றியாகவே இந்த தீர்ப்பு கருதப்படுகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.