மாற்றுத்திறனாளிகளுக்கு குட்நியூஸ் – தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!

மாற்றுத் திறனாளிகள் அணுகக்கூடிய வகையில் 442 தாழ்தள பேருந்துகள் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளது தமிழக அரசு தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இன்றைய விசாரணையின் சென்னையில் மட்டும் 37.4% பேருந்துகள் மாற்றுத் திறனாளிகள் அணுகக்கூடிய வகையில் தயார் செய்யபட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தாழ்தள பேருந்துகள் என்பது மாற்றுத் திறனாளிகளுக்கானது என கூறுவது தவறு. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பேருந்தில் ஏறுவது இன்றளவும் சவாலானதாக உள்ளது எனத் தெரிவித்த நீதிபதிகள், கொள்முதல் செய்யக்கூடிய அனைத்து பேருந்துகளையும் தாழ்தள பேருந்துகளாக ஏன் வாங்கக்கூடாது. அதில் என்ன தொழில்நுட்ப பிரச்னைகள் உள்ளது என கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஜனவரி 20ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.