11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு: ஏப்ரல் 25ஆம் தேதி முதல் நடைபெறும்!
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி அரசு தேர்வுகள் இயக்கம் ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வை நடத்தி முடிக்க உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் தற்போது பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கும் செய்முறை தேர்வு நடத்தப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே இரண்டாம் தேதி வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே இரண்டாம் தேதி தேதிக்குள்ளாக செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. பதினோராம் வகுப்பு செய்முறை தேர்வு மதிப்பெண்களை மே 4 ஆம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
