
செய்திகள்
பறிபோகிறது ராஜபக்ச பதவி..! இலங்கை அதிபர் ஒப்புதல்;
இலங்கையில் புதிய பிரதமரை நியமிக்க, அதிபர் கோத்தபய ராஜ்பக்சே ஒப்புதல் அளித்திருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவரும், முன்னாள் அதிபருமான மைத்ரிபால சிறிசேன தகவல் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக பெரும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத நிலையில் அந்நாட்டு மக்கள் திண்டாடி வருகின்றனர்.
குறிப்பாக இலங்கையின் முக்கிய நகரமான கொழும்பில் நாளொன்றுக்கு 13 மணி நேரம் மின்வெட்டு தொடர்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதனால் அந்நாட்டு பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டுமென பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜ்பக்சே அனைத்து கட்சி தலைவர்களுடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் முன்னாள் அதிபருமான மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டார்.
அப்போது புதிய அமைச்சரவை அமைக்க உதவுவதற்கு தேசிய சபை ஒன்றை நியமிக்க கோத்தபய ராஜ்பக்ச ஒப்புதல் அளித்திருப்பதாக கூறினார். மேலும், ஏற்கனவே தனது பதவியில் இருந்து விலக போவதில்லை என கூறிய நிலையில் தற்போது புதிய பிரதமரை நியமிக்க ஒப்புதல் அளித்திருப்பதாக கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
