ஆசிரியர்கள் நியமனம்: மறுஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்ற கூடிய நித்தியா என்பவர் ஆங்கில பாட பிரிவில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை அமர்வு இன்று வந்தபோது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழ் பாடப்பிரிவில் பிஏ தமிழ் முடித்துவிட்டு பிஏ ஆங்கிலம் படித்தால் தமிழ் பிரிவிற்கு மட்டும் பதவி உயர்வு வழங்கலாம் என கூறினார்.

கார்த்திகை தீபம்: பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு!!

அதோடு கல்வி நிறுவனங்களில் நேரில் சென்று படித்தவர்களே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டுமென ஏற்கனவே உயிர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியதை குறிப்பிட்டு வழக்கறிஞர் தொலைதூரக் கல்வியை படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கான தகுதியோ தகுந்தவர்களோ அல்ல என்பதை தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக இட ஒதுக்கீடு முறையில் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்யும்போது தகுதியானவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்!! என்ன தெரியுமா?

இந்நிலையில் தற்போது ஆசிரியர்களாக உள்ள பெரும்பாலானோர் கல்லூரிகளுக்கு நேரில் சென்று படிக்காதவர்களாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது என நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். அதோடு தமிழக அரசு கல்விக்காக 36 ஆயிரத்து 795 கோடி ஒதுக்கீடு செய்யக்கூடிய நிலையில் இதில் ஆசிரியர்களின் சம்பளம் பெரும்தொகையாக செலவிடப்பட உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.

அப்போது கல்வி நிறுவனங்களில் நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிப்பதற்கு உரிய நடவடிக்கைகல் எடுக்கப்படும் என்ற அறிக்கையை சுட்டிக்காட்டிய நீதிபதி ஆசிரியர்கள் நியமன திட்டம் குறித்து மறு ஆய்வு செய்யவேண்டும் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்திருக்கிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.