குஷியோ குஷி!! உதவி பேராசிரியர்கள் நியமனம் திடீர் ரத்து..!!!

தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு கலை கல்லூரிகளில் கடந்த 2019-ம் ஆண்டு 2,331 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் அறிவிப்பின் அடுத்தக்கட்ட நகர்வு இன்னும் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த சூழலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் 4 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் புதிய உத்தரவை அமல்படுத்துவதால் முன்னதாக அறிவிக்கப்பட்ட உதவி பேராசிரியர் பணி நியமனம் ரத்து செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 4 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.