Connect with us

பி.எட் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: கல்வி இயக்குநரகம் அறிவிப்பு!

Tamil Nadu

பி.எட் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: கல்வி இயக்குநரகம் அறிவிப்பு!

4b1b6cdb39ecf8475cb74685a375d8a3

பிஎட் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாணவர்கள் விண்ணப்பம் செய்ய தயாராகி வருகின்றனர் 

ஏற்கனவே மெடிக்கல், இன்ஜினியரிங், கலை அறிவியல் கல்லூரி உள்பட அனைத்து கல்லூரிகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன என்பதும் அட்மிஷன் ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இன்று முதல் பிஎட் படிப்பு இருக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள ஏழு அரசு கல்வியியல் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் செப்டம்பர் 22-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் எனவும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய முடியாத மாணவர்கள் அருகில் உள்ள கல்வியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்றும்  கல்லூரி கல்வி இயக்குனர் பூரணச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top