அடி தூள்!! MBBS சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!

தமிழகத்தில் MBBS, BDS போன்ற படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவடையும் நிலையில், வருகின்ற 6-ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2022-2023- ஆம் ஆண்டிற்கான MBBS, BDS ஆகிய இளநிலை மருத்துவ பட்டப்படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க இன்றுடன் கடைசி நாள் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்திருந்தது.

அடி தூள்!! MBBS சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!

இந்நிலையில் அரசு கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கையானது கடந்த சில தினங்களுக்கு முன் நடைப்பெற்று முடிந்தது.

குறிப்பாக செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் நடைப்பெற்ற சேர்க்கையில் இதுவரையில் 31 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சம் தொட்ட தங்கம் விலை: கண்ணீர் வடிக்கும் நகை பிரியர்கள்..!!

இதற்காக மருத்துவக் கல்வி இயக்ககத்தின் அஹிகாரப்பூர்வ இணையதளமான https://tnmedicalselection.net/Notification.aspx என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் வருகின்ற 6-ம் தேதி வரையில் MBBS, BDS போன்ற படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment