இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோரில் மாத விற்பனை இத்தனை கோடியா? ஆச்சரிய தகவல்..!

இந்தியாவின் முதல் ஆப்பிள் சில்லறை விற்பனை நிலையம் மும்பையில் திறக்கப்பட்டது என்பதும் அதனை அடுத்து டெல்லியில் திறக்கப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்தியாவின் முதல் இரண்டு ஆப்பிள் ஸ்டோர்களின் மாத விற்பனை ரூ.22 கோடியை தாண்டி உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை மற்றும் டெல்லியில் அமைந்துள்ள இரண்டு ஆப்பிள் ஸ்டோர்களூம் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. பலர் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை இந்த ஸ்டோரில் வாங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் இரண்டு ஆப்பிள் ஸ்டோர்களும் மிகவும் வெற்றிகரமாக இயங்கி வருவதை அடுத்து மேலும் சில நகரங்களில் ஆப்பிள் ஸ்டோர்களை திறக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சென்னை, பெங்களூர், புனே,கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட ஒரு சில இடங்களிலும் ஆப்பிள் ஸ்டோர் விரைவில் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பதை அடுத்து 2 ஆப்பிள் ஸ்டோர் தொடங்கப்பட்டது. இந்த இரண்டு ஸ்டோர்களிலுமே மிகப்பெரிய வர்த்தகம் நடைபெற்று வருவதை அடுத்து ஆப்பிள் நிறுவனம் மகிழ்ச்சி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஆப்பிளின் முதல் ஸ்டோர்கள் வெற்றியடைந்ததற்கான சில காரணங்கள் இதோ:

* அதிக எண்ணிக்கையிலான வசதியான நுகர்வோர்களைக் கொண்ட முக்கிய நகரங்களில் அவை அமைந்திருந்தன.

* மற்ற சில்லறை ஸ்டோர்களில் இல்லாத தனித்துவமான ஷாப்பிங் அனுபவத்தை அவர்கள் வழங்கினர்.

* ஏராளமான ஆப்பிள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும் விற்பனை செய்யவும் வைத்திருந்தனர்.

* மேலும் ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்கள் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கினர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...