கேமரா என்றால் சோனி கேமரா தான் என்பதும் சோனி கேமராவில் உள்ள தரம் உலகின் வேறு எந்த கேமராவிலும் இருக்காது என்பதும் தெரிந்ததே. சோனி மொபைல் போனில் உள்ள கேமராக்கள் மிகச்சிறந்ததாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஆப்பிள் ஐபோனில் சோனி கேமரா பயன்படுத்தப்படுவதாக ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஐபோனில் உலகின் முன்னணி கேமரா சென்சார்களை உருவாக்க திட்டமிட்டோம் என்றும், அதன் காரணமாக சோனி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம் என்றும் அவர் தனது டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக ஆப்பிள் ஐபோனில் உள்ள கேமரா மிகச் சிறந்த தரத்துடன் உடையது என்பது உறுதியாகியுள்ளது.
ஆப்பிள் ஐபோனில் சோனி கேமராவை பயன்படுத்தும் ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்ட சோனி நிறுவனம் தனது நன்றி என்றும் அவர் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். ஆப்பிள் ஐபோனில் உள்ள கேமரா எந்த நிறுவனத்திற்கு சொந்தமானது என்ற வாதம் சமூக வலைதளங்களில் இருந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் தனது டுவிட்டரில் மூலம் சோனி கேமரா தான் என்பதை டிக் குக் கூறியுள்ளார்.
ஆப்பிள் ஐபோன் தனது தயாரிப்பு வடிவமைப்புகளை இதுவரை ரகசியமாக வைத்திருந்த நிலையில் முதல் முறையாக கேமரா குறித்த விவரங்களை வெளியே தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் மற்றும் சோனி இடையிலான ஒப்பந்தம் தொடரும் என்றும் சோனி கேமராக்களின் புதிய மாடல்கள் வரவிருக்கும் நிலையில் அந்த மாடல்களை அடுத்தடுத்த ஐபோன் மாடல்களில் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
We’ve been partnering with Sony for over a decade to create the world’s leading camera sensors for iPhone. Thanks to Ken and everyone on the team for showing me around the cutting-edge facility in Kumamoto today. pic.twitter.com/462SEkUbhi
— Tim Cook (@tim_cook) December 13, 2022