Connect with us

வாக்கு எண்ணிக்கைக்கு மத்திய அரசு பணியாளர்களை நியமிக்க முறையீடு-உயர் நீதிமன்றம் மறுப்பு;

vote counting6

செய்திகள்

வாக்கு எண்ணிக்கைக்கு மத்திய அரசு பணியாளர்களை நியமிக்க முறையீடு-உயர் நீதிமன்றம் மறுப்பு;

வாக்கு எண்ணிக்கைக்கு மத்திய அரசு பணியாளர்களை நியமிக்க முறையீடு-உயர் நீதிமன்றம் மறுப்பு;

தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை அன்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள ஒரு சில வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

சனிக்கிழமை ஒரு சில வார்டுகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நாளைய தினம் தமிழகத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதற்கு மத்திய அரசு பணியாளர்களை நியமிக்க கோரி முறையீடு செய்யப்பட்டது. அதன்படி சிவகாசி மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு மத்திய அரசு பணியாளர்களை நியமிக்க கோரி முறையீடு செய்ய பட்டுள்ளது.

அதிமுக நகர செயலாளர் பொன்சக்திவேல் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. நாளைய வாக்கு எண்ணிக்கை தொடர்பாகவும் கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரியும் மேலும் சிலர் முறையீடு செய்துள்ளனர்.

ஆனால் தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. ஏனென்றால் மனு தாக்கல் செய்யாமல் முறையிட்டு ஏற்க முடியாது என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. விசாரித்து உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top