பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு!! ஓபிஎஸ் டீம் அதிரடி!!

இன்றைய தினத்தில் அதிமுகவில் மிக முக்கிய தினமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடந்த மாதம் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என தனி நீதிபதி உத்தரவை பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அமர்வானது இன்று இரண்டு நீதிபதிகள் முன் வந்தது.

அப்போது பேசிய நீதிபதி ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உத்தரவை பிறப்பித்திருந்தார். இத்தகைய தீர்ப்பானது ஓபிஎஸ் தரப்பினரிடம் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் படி, ஓபிஎஸ் உடன் ஆலோசனை நடத்திய பிறகு அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு தாக்கல் செய்யப்படுவதாக கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment